• Thu. Apr 25th, 2024

தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் பயில வாய்ப்பு

ByA.Tamilselvan

Jul 22, 2022

ரஷ்யாவில் மருத்தவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புக ள் குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 12 ரஷ்யப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் தமிழகம் வருகை தருகிறார்கள்.
ரஷ்ய மருத்துவ, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியின் 20-ஆம் ஆண்டு நிகழ்வு, ஜூலை 23 முதல் 24 வரை சென்னையிலும் (ரஷ்ய கலாச்சார அறிவியல் மையம்), ஜூலை 26-ஆம் தேதி கோவையிலும் (ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்), ஜூலை 28-ஆம் தேதி மதுரையிலும் (ஹோட்டல் தி மதுரை ரெசிடென்சி), ஜூலை 29-ஆம் தேதி திருச்சியிலும் (ஹோட்டல் ஃபெமினா), காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். நிகழ்ச்சிகள், கண்காட்சி பற்றிய விவரங்களை அறிய மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9282 221 221 / 99401 99883. இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலமான படிப்பு மருத்துவம் ஆகும். 70-க்கும் மேற்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. பட்டத்தை வழங்குகின்றன, இது இந்தியாவின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையானது. இந்தப் பல்கலைக் கழகங்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்டவை என்று சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதரகத் துணைத் தூதர் லகுடின் செர்ஜி அலெக்ஸீவிச் கூறினார். ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி. ரவிச்சந்தி ரன் கூறுகையில், “வர்த்தக அடிப்படை யிலும் அரசு உதவித்தொகை சார்ந்தும் சர்வதேச மாணவர்கள் உயர்கல்வி யைப் பெறுவதற்கு ரஷ்யா விருப்பமான இடமாக மாறிவருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *