
மோடி அரசின் ஆதரவுடன் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் மக்கள் விரோத போராட்டத்தின் எதிரொலி, தாயாக போற்றும் பெண்களை துகில் உரிந்து வீதியில் நடத்தி சென்றதுடன், பொது வெளியில் பாலியல் பலாத்காரம் செயல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வரை பதவி விலக்க வேண்டும்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும்.
மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு முகங்களில் தங்கியிருக்கும் மக்களின் உடல் நலம் பேணும் மருத்துவ வசதி, பல பெண்கள், குழந்தைகள் மாற்று உடை கூட இல்லாமல் இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக எல்லா முகாம்களையும் நேரடியாக சென்று சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்.
மத்திய அரசு ஒரு குழுவை மணிப்பூருக்கு அனுமதி உண்மை நிலையை ஆய்வு செய்து ஒன்றிய அரசு அறிக்கை கொடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழக மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகிய.வை. தினகரன்.

