• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

Byவிஷா

Feb 12, 2024

தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணித்ததுடன், இந்தக் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இம்முறை அரசின் உரையை முழுமையாக புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில்” தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் வரும் 22-ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 13, 14 (அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் எனவும், பிப்ரவரி 15-ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எனவும் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கம் செய்கிறார். பின்னர் பிப்ரவரி 20ம் தேதி 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் 21ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனவும் 22-ம் தேதி பதிலுரை வழங்கப்படும்” என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.