• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது.இந்த வனப்பகுதிகளில் அவ்வபோது மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சோதனை சாவடிகளில் மூன்று மாநில எல்லையிலும் பாதுகாப்பு காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தலூர் பகுதியில் இன்று தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சல்கள் நடமாட்டம் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் எவ்வாறு கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.