• Fri. Apr 26th, 2024

2061ஆம் ஆண்டு மக்கள் தொகை ஏற்ப மதுரை ரயில் நிலையம் புனரமைப்பு-எம் பி பேட்டி

Byp Kumar

Feb 21, 2023

2061ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை ரயில் நிலையம் புனரமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக மதுரை எம் பி பேட்டி
மதுரை ரயில் நிலையத்தை புணரமைக்கும் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்,


மதுரை ரயில் நிலையத்தை புனரமைப்பு செய்ய மத்திய அரசு சென்ற வருடம் ஒப்புதல் வழங்கியது. ரூபாய் 347 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.வரும் 2061 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்றார் மதுரை ரயில் நிலையம் புனரமைக்கப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி மதுரை ரயில் நிலையத்தில் தினசரி 42 ஆயிரம் பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். 2061 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தை ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் பயணிக்க உள்ளார்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தகவல் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் மதுரை ரயில் நிலையம் தயாராக உள்ளது. இந்த புனரமைப்பு பணியுடன் சேர்த்து ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் சுரங்க நடைபாதை பணியும் நடைபெ உள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் பயணிகள் தங்கும் அறைகள் வரவுள்ளது. தரைத்தளம் முழுக்க பயணிகளுக்கான தலமாக இருக்கும் அதற்கு மேல் உள்ள தளம் அலுவலர்களுக்கான தளமாக மாற்றப்படும். தமிழ்நாட்டிலேயே அதிக கோரிக்கைகள் பெற்று முன்னுரிமை வழங்கப்பட்ட ஒரே ரயில் நிலையம் மதுரை ரயில் நிலையம் ஆகும். தமிழ்நாட்டிலேயே முன்னுதாரணமான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் வடிவமைக்கப்படும். மேலும்,மதுரை கூடல் நகர் ரயில் நிறுத்தத்தை இரண்டாவது ரயில் நிலையமாக மாற்றுவது குறித்து மார்ச் 10ஆம் தேதி அனைத்து எம்பிக்கள் பங்கேற்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்படும். மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *