• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அன்னையர் தினத்தின் முன்னோடி தமிழகமே

ByA.Tamilselvan

May 8, 2022

அன்னையர்தினம் என்பது அமெரிக்காவை பின்பற்றி உலகம் முழவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தின் வரலாறு என வெளிநாட்டில் நடந்த நிகழ்வை முன் வைக்கிறார்கள் ஆனால் தமிழகமே அன்னையர்தினத்தின் முன்னோடியாக இருக்க முடியும்.
தமிழர்களின் பொதுவாக திராவிடர்களின் பெரும்பலான கடவுகள் பெண் தெய்வங்கள்தான். காளியம்மா,மாரியம்மா,அன்னை மீனாட்சி,காஞ்சி காமட்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.அதுமட்டுமல்ல சிறுதெய்வ வழிபாட்டு தெய்வங்களும் பெண் தெய்வங்களே. வீரசின்னம்மா,முத்தலம்மா, என பட்டியல் தொடரும். சிவராத்தி அன்று வழிபடும் தெய்வங்களில் பெரும்பாலனவை பெண் தெய்வங்கள் தான்.
இந்த பெண் தெய்வ வழிபாடுமனித இனத்தின் ஆதி வழிபாட்டு முறை எனலாம். அதாவது மனிதர்கள் நாகரீக வளர்ச்சியடைவதற்கு முன் தொடங்கியதாகும்.பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டின் சாரம்சம் என்னவென்றால் பெற்ற தாயை வழிபடுதல், அல்லது தன் இனத்தை காத்த பெண்ணை வழிபடுதல்.ஒரு ஊரின் சொத்துக்களான ஆடு,மாடுகளை காத்த பெண்,அல்லது ஊரை பேரிடரிலிருந்து பாதுகாத்த பெண் என பெண்ணின் வீரத்தை .மகத்துவத்தை தமிழர்கள் ஆதிகாலம் தொட்ட வணங்கி வருகிறார்கள்.
சித்திரை திருவிழா,வைகாசி திருவிழா,மாசிமகம் என பல பெயர்களில் பெண் தெய்வ வழிபாடு இன்றும்தொடர்கிறது எனலாம்.
அமெரிக்காவில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் முதன்முதலாக 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உருவானது. அன்னா ஜாவிரிஸ் (ANNA JARVIS) என்ற பெண்ணின் தாய் 1905 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் தனது தாய் இறந்தநிலையில், அவரின் நினைவாக 1908ம் ஆண்டு மே மாதம் தாய்மார்களை அழைத்து அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்.பின்னர், ஆண்டுதோறும் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய அவர், இதனை அமெரிக்க அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தார். . 1940ம் ஆண்டு மே 9 ஆம் தேதி அன்னையர் தினத்துக்கான பிரகடனத்திலும் கையெழுத்திட்டார்.அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. .
பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளின் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்தில் மார்ச் மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றனர். மதர் சர்ச் நினைவாக கிறிஸ்டியன் மதரிங் சன்டே (Christian Mothering Sunday) கடைபிடிக்கப்படுகிறது கிரீஸ் நாட்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி ஜீசஸ் கிறிஸ்ட் டெம்பிளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இப்படி வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் அன்னைதினத்திற்கு ஆதிகாலம் தொட்டு பெண் தெய்வங்களைவழிபட்டுவருகிறதமிழர்களே முன்னோடிகளா இருக்க முடியும்.