• Fri. Mar 29th, 2024

செப்.4 ல் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

ByA.Tamilselvan

Sep 2, 2022

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2வது பரிசு ரூபாய் 1 லட்சம், 3வது பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 பவுன் தங்க பதக்கம் வழங்கப்படுகிறது
சின்னத்திரை விருதுகள்:
2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2வது பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என 20 பேருக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்க பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்கள் அனைவரும் விழாவிற்கு மாலை 4 மணிக்கு தவறாமல் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து, பதிவு செய்தல், கையொப்பமிடுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு விருதுகள்-2009
சிறந்த படங்கள்:
1.பசங்க
2.மாயாண்டி குடும்பத்தார்
3.அச்சமுண்டு அச்சமுண்டு

தமிழ்நாடு அரசு விருதுகள் – 2010
சிறந்த படங்கள்:
முதல் பரிசு – மைனா
2ம் பரிசு – களவாணி
3ம் பரிசு – புத்ரன்
தமிழ்நாடு அரசின் விருதுகள் -2011
சிறந்த படங்கள்:
முதல் பரிசு – வாகை சூடவா
2ம் பரிசு – தெய்வத்திருமகள்
3ம் பரிசு – உச்சிதனை முகர்ந்தால்
சிறப்பு பரிசு – மெரினா

தமிழ்நாடு அரசு விருதுகள் – 2012
சிறந்த படங்கள்:
முதல் பரிசு – வழக்கு எண் 18/9
2ம் பரிசு – சாட்டை
3ம் பரிசு – தோனி
சிறப்பு பரிசு – கும்கி
தமிழ்நாடு அரசு விருதுகள் – 2013
சிறந்த படங்கள்:
முதல் பரிசு – ராமானுஜம்
2ம் பரிசு – தங்கமீன்கள்
3ம் பரிசு – பண்ணையாரும் பத்மினியும்
சிறப்பு பரிசு – ஆள்

தமிழ்நாடு அரசு விருதுகள் – 2014
சிறந்த படங்கள்:
முதல் பரிசு – குற்றம் கடிதல்
2ம் பரிசு – கோலி சோடா
3ம் பரிசு – நிமிர்ந்து நில்
சிறப்பு பரிசு – காக்கா முட்டை
சிறந்த இசையமைப்பாளர்
2009- சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)
2010- யுவன்சங்கர் ராஜா (பையா)
2011- ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)
2012- இமான் (கும்கி)
2013- ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
2014- ஏ.ஆர்.ரஹ்மான் (காவியத் தலைவன்)

சிறந்த இயக்குநர்கள்
2009 – வசந்தபாலன் (அங்காடித் தெரு)
2010- பிரபு சாலமன் (மைனா)
2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013- ராம் (தங்க மீன்கள்)
2014- ராகவன் (மஞ்சப்பை)
சிறந்த நடிகர்:
2009 – கரண் (மலையன்)
2010 – விக்ரம் (ராவணன்)
2011 – விமல் (வாகை சூடவா)
2012 – ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)
2013 -ஆர்யா (ராஜா ராணி)
2014 – சித்தார்த் (காவியத்தலைவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *