• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர் கர்நாடக எல்லையில் சடலமாக மீட்பு.. பரபரப்பு

அடிப்பாளாறு பகுதியில் காணாமல் போன தமிழக மீனவர் குண்டடிபட்ட காயத்துடன் சடலமாக மீட்க பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு பகுதியில் இரு மாநில போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது…
தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி தமிழக மீனவர்கள் காவிரி நீர் பிடிப்பு பகுதியான பாலாறு கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்று நான்குக்கு மேற்பட்ட மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்து உள்ளனர் அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதில் சிலர் தப்பி சென்று விட்டனர் ஆனால் கோவிந்த பாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை என்பதால் கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்று ஆற்றங்கரையில் தேடி வந்தனர். பாலாறு ஆற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் .நேற்று மாலை கர்நாடக வனத்துறையினர் பரிசல் மூலம் பாலாறு கரையில் துப்பாக்கி சூட்டில் யாரேனும் பலியாகி நீரில் மூழ்கி உள்ளனரா என்று தேடி பார்த்து சென்றுள்ளனர்.
இதனால் இரு மாநில எல்லைகளும் பதற்றம் நிலவி வருகிறது பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடிக்கு கர்நாடகா போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .இந்த நிலையில் இன்று காணாமல் போன மீனவர் ராஜாவின் உடன் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் உடல் மிதந்து வந்தது.இதனை தமிழ்நாடு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் கர்நாடக மாநிலம் கோபி நத்தம் மண்டல வன அலுவலர் சம்பத் படேல் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இறந்த ராஜா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவில் அடி பாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றார்கள் என்றும் அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட பறவைகள் மான்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கர்நாடகா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் மீன் பிடிக்க சென்றவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது ஏன் என்பது குறித்தும் தொடர்ந்து இதே போல பல வேட்டை கும்பல்கள் அடிபாலாறு வனப்பகுதிகளில் வருகின்றனர். இதனால் கர்நாடக வனத்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தமிழக கர்நாடகா எல்லையான அடிப்பாளாறு பகுதியில் இரு மாநில போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.