• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அமைச்சரவை கூட்டம் … புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

ByA.Tamilselvan

Aug 30, 2022

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்வது, மின்சார கட்டணம் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க பட்டதாக தெரிகிறது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பதா அல்லது நேரடியாக மக்கள் பார்வைக்கு வெளியிடுவதா என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.