• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பெண் பவுன்சராக தமன்னா!

மதுர் பண்டர்க்காரின் அடுத்த திரைப்படமான “பப்ளி பவுன்சர்”( “BABLI BOUNCER”) இல் தமன்னா பாட்டியா முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிக உயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார். தமன்னா பாட்டியாவை முன்னெப்போதும் கண்டிராத வகையில் பப்ளி பவுன்சர் அவதாரத்தில் முன்னணி கதாபாத்திரமாக தோன்றச்செய்து ஒரு தனித்துவமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார்.. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான’ அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்

ஒரு பெண் பவுன்சரின் கதையை வாழ்க்கையோடு இணைந்த நகைச்சுவை உணர்வோடு சித்தரிக்க விரும்புகிறேன், அதுவும் மனதை விட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை விளைவிக்கிறது ” என்று திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டர்க்கார் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் “பாப்லி பவுன்சரின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், பெண் பவுன்சர்கள் குறித்த உலகத்தின் பார்வையில் இந்தக் கதையை முன்வைக்க எப்போதும் போலவே நான் தயாராக இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த அற்புதமான கதை, தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்!” என்றார்

படம்குறித்து, நடிகை தமன்னா பாட்டியா கூறுகையில், “பாப்லி பவுன்சர் கதையைப் படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால் நான் இதுவரை கண்ட அனைத்தைக் காட்டிலும் இது ஒரு மிகவும் உற்சாகமான மற்றும் ஜாலியான கதாபாத்திரமாகும். பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் வரையறுப்பதிலும் மதுர் சார் மிகச்சிறந்த திறமைசாலி . பப்ளியும் அம்மாதிரியான ஒரு வலிமை வாய்ந்த கதாபாத்திரம். ஒரு திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதல் முதலாக பிரதிபலிக்க போகிறது , அந்த கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப்போகிறேன் என்பதை அறிந்து நான் சொல்லமுடியாத அளவுக்கு உற்சாகத்தில் இருக்கிறேன். இந்த புதிய உலகத்தில் பிரவேசிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் தமன்னா .

இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.