• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தையல் கலை பயிற்சி முகாம்

ByKalamegam Viswanathan

Jan 9, 2025

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் வ.உ.சி.ஐ.வி. அறக்கட்டளை சார்பாக இலவச தையல் கலை பயிற்சி முகாம் 30 நாட்கள் நடந்தது‌.
இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழாவிற்கு, கௌரவத்தலைவர் பாபநாசம் பிள்ளை தலைமை தாங்கினார். சங்க தலைவர் தங்கராசு பிள்ளை, மாரியப்பன், ராஜேந்திரன், சரவணன், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி சிவகாசி செல்வி வரவேற்றார். இந்த விழாவில் செயலாளர் செந்தில்குமார் மகளிர் சுய தொழில் மேம்பாட்டு திட்டம் பற்றி பேசினார். புதிய நீதி கட்சியின் தென் மண்டல செயலாளர் வெங்கடாசலம் பிள்ளை தையல் உபகரணங்கள் வழங்கினார். துணைத் தலைவர் முருகவேல் பரிசுகள் வழங்கினார்.இதில் நாக முத்துராஜா, சோனை பாண்டி, சுரேஷ் குப்புசாமி, பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில் மகளிர்அணி நிர்வாகிகள் சிலம்பரசி, முத்து லட்சுமி, அங்காள ஈஸ்வரி, சரஸ்வதி மற்றும் பயிற்சியாளர்கள் வானதி, கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், பொருளாளர் சந்தன பாண்டி நன்றி கூறினார்.