• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

டி20 உலக கோப்பை – ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி…

Byமதி

Oct 29, 2021

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நேற்று விளையாடின. இதில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்து.

பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணிக்காக குசல் பெரேரா, அசலங்கா மற்றும் பனுகா ராஜபக்சே என மூன்று பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதில் சாம்பா நான்கு ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. துவக்க வீரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதன்பின்னர் ஸ்டீவன் ஸ்மித் (28 ரன்கள்), ஸ்டாய்னிஸ் 16 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா வெற்றியை எட்டியது.

3 ஓவர்களில் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, 2 விக்கெட்களையும், தசுன் ஷனகா 1 விக்கெட்டும் எடுத்தனர்.