• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி!..

Byமதி

Oct 11, 2021

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, மூனியின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 52 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தார். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்களில் தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.