இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது தலைவராக டாக்டர் கோஷல்ராம் பொறுப்பேற்றார்.
2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவில் செயலாளராக டாக்டர் பரமேஸ்வரன் அவர்களும், நிதிச் செயலாளராக டாக்டர் பாலமுருகன் அவர்களும் பொறுப்பேற்றனர்.

இந்தப் பதவி ஏற்பு விழா கோயம்புத்தூரில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் கூட்டம் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் முதன்மை விருந்தினராக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளையின், தலைவர் டாக்டர் ஸ்ரீதர், தலைவர், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின், தலைவர், டாக்டர் ஜெயலால், மற்றும் ஹாஸ்பிடல் போர்ட் ஆஃப் இந்தியா தலைவர், டாக்டர் அபுல் ஹசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் 2026- ம் ஆண்டிற்கான இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தேர்வு டாக்டர் A.K. ரவிகுமார், 2027 ஆம் ஆண்டிற்கான மாநிலத் தலைவர், டாக்டர் N.R.T.R. தியாகராஜன், மாநில கௌரவச் செயலாளர், டாக்டர் திரவியன் மோகன், மாநில நிதிச் செயலாளர், டாக்டர் சாலமன் ஜெயா, முன்னாள் மாநிலச் செயலாளர், டாக்டர் கார்த்திக் பிரபு, ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

இந்த நிகழ்வில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோயம்புத்தூர் கிளை சார்பில் மூன்று முக்கிய முன்னோடி திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன:
1. சர்க்கரை நோய் (Diabetes) குறித்த விழிப்புணர்வு
2. கண் தானம் குறித்த விழிப்புணர்வு
3. Drug Abuse தடுப்பு குறித்த விழிப்புணர்வு
விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் பல மாநில மற்றும் உள்ளூர் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.




