• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களின் ஆரவாரத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.நிறைய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகுசூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்களில் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்து பல சர்வதேச விருதுகளை குவித்தது.

இந்நிலையில் அடுத்ததாக கூட்டுக் குடும்ப பின்னணி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதை களத்தில் சூர்யா நடித்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.