• Tue. Sep 10th, 2024

சென்னையில் கனமழை சேதம், உயிரிழப்பு ராகுல்காந்தி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முற்பகல் முதலே நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனுடன் மழை காரணமாக மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை மயிலாப்பூரில் கனமழையால் வீட்டின் முன்புறம் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த லட்சுமணன் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்தார். சென்னை ஓட்டேரியில் நியூ பேரண்ட்ஸ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த லட்சுமி என்ற மூதாட்டியும், சென்னை புளியந்தோப்பு பகுதியில் தெருவில் கடைக்கு நடந்து சென்ற மீனா என்பவரும் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில்,”எனது எண்ணம் முழுவதும் தமிழ்நாடு மக்கள் குறித்தே இருக்கிறது. சென்னையில் நேற்று பெய்த கனமழையில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் மற்றும் மழைக்காலத்தில் அரசாங்கம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றுங்கள்..பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *