

கொரோனா பரவல் இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக வந்த போது ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதும் ஆரம்பமானது முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் ஓடிடி பக்கம் வந்தது.
சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான போது அதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படம் வெளியான 2020 நவம்பர் மாதத்தில் கொரானோ முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்களைத் திறந்தனர்.
அப்போது இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும். அதை இழந்த வருத்தம் தியேட்டர்காரர்களிடம் அதிகம் இருந்தது.
அதற்குப் பிறகு புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடியில் படங்களை வெளியிடலாம் என பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்தனர். ஓடிடி வெளியீடுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.
கடந்த வருடம் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படமும் ஓடிடியில்தான் வெளியானது. இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா நடித்த இரண்டு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அவை தியேட்டர்களில் வந்திருந்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமாகத்தான் அமைந்திருக்கும்.
2019ல் வெளிவந்த ‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம்தான் தியேட்டர்களில் வெளியாகப் போகிறது.
இரண்டு ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா ரசிகர்கள் இப்படத்தைத் தியேட்டர்களில் காண காத்திருக்கின்றனர்.
- தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாட்டிற்கு தமிழரின் தொன்மைக்கு சான்றாய்த் திகழும் கீழடியில் இருந்து சுடரோட்டம் துவக்கம்…உலக தமிழர் பேரமைப்பின் சார்பில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாடு தஞ்சையில் நடைபெறுகிறது. … Read more
- சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கரில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா, கட்டியணைத்துப் பாராட்டிய மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாமன்னன் பாடலால் நிகழ்ந்த அற்புதம் !!தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக … Read more
- கள்ளக்காதலில் கருத்து வேறுபாடு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே காவலர்கள்…கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் மதுரை அருகே … Read more
- ராஜபாளையம் அருகே மூதாட்டி கொலை.., குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் … Read more
- முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், … Read more
- அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர்… எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..,அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் என்று அனுஷ வைபவ விழாவில் எழுத்தாளர் … Read more
- சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக். இயக்குநர் நந்தா பெரியசாமி … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி … Read more
- படித்ததில் பிடித்தது தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?கொச்சி … Read more
- குறள் 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் … Read more
- “இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமா வளவன்மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில், “இந்த கிரைம் தப்பில்ல” என்ற திரைப்படத்தின் … Read more
- சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..,மதுரை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் … Read more
- ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை..,மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25. … Read more
- அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் … Read more
