• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வில்லனாகவிஸ்வரூபம் எடுக்கும் நடிகர் சூர்யா

அஜீத்குமார் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகமாகி நியு படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யாவை இயக்குனர்முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக அறிமுகம் செய்தார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்குபடங்களில் வில்லன் கதாபாத்திரமா கூப்பிடு எஸ்.ஜே.சூர்யாவை என்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா மாநாடு வெற்றிக்கு பின் நட்சத்திர வில்லன் நடிகராக மாற்றம் கண்டுள்ள சூர்யாவை தனக்குவில்லனாக நடிக்க அவரை சிபாரிசு செய்ய தொடங்கியுள்ளனர்.


இந்த நிலையில் தற்போது, அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் நடிகர் விஷால், பிரம்மாண்டபொருட்செலவில் ‘எனிமி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிப்பில் பான் இந்தியன் திரைப்படம் (Pan Indian Movie) ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த திரைப்படத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரபலமான நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.