• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சயின்ஸ்பிக்சன் படமான 24 இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சூர்யா

தமிழ் சினிமாவில் வணிக முக்கியத்துவமுள்ளவர் நடிகர் சூர்யாசூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் 24
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான கதை களத்தில் வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகிறது
முன்னணி நடிகராக உள்ள சூர்யாவின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி மாற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது . குறிப்பாக தமிழைப் போலவே தெலுங்கிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.சயின்ஸ் ஃபிக்க்ஷன்,டைம் டிராவலிங்கை மையப்படுத்தி தமிழில் வெளியான திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 திரைப்படம் டைம் ட்ராவலிங்கை மையப்படுத்தி வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான 24 படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார். டைம் டிராவல் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷனை மையப்படுத்தி வெளியான 24ல் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார்வில்லன் கதாபாத்திரம்
ஹீரோ மற்றும் வில்லன் எனஒரே படத்தில் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. மேலும் இந்த படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக தேசிய விருதையும் வென்றது. நித்யா மேனன் மற்றும் சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருந்தனர்.

சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும் குறிப்பாக ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.24 வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழ் சினிமாவில் இது அசாத்திய முயற்சி என்றே சொல்லலாம். அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்ற 24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதில் சூர்யா தீவிர முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.