• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அரசியலில் ஒரு வித்தியாசமான சாதனை படைத்த சுரேஷ் ராஜான்

கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் மிக இளம் வயதிலே ஒரு அசைக்க முடியாத சக்தியாக.20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். குமரி மாவட்டத்தில் நாடார் அல்லாத பிற இனத்தை சேர்ந்த ஒருவர் சுரேஷ் ராஜான் என்பது ஒரு வித்தியாசமான அரசியலில் சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் முதல் தேர்தலிலே போட்டி இட்டு வெற்றி பெற்றதுடன், இளைஞர் அணி செயலாளராக இருந்த ஸ்டாலின் பரிந்துரையில் சுற்றுலா துறையின் அமைச்சராக பதவி வகித்தவர்.

குமரி மாவட்டத்தில் திமுக வில் மிசா கலத்தில் சிறைத்தண்டனை பெற்ற இ.ரா. பெர்னாட் குளச்சல் தொகுதியில் வெற்றி பெற்று இருந்த நிலையில், சுரேஷ் ராஜானுக்கு இளம் வயதில் அமைச்சர் பதவி கொடுத்தது. அந்த காலகட்டத்தில் குமரி திமுகவில் ஒரு முணு முணுப்பு பெரிதாக கேட்டாலும், அமைச்சர் பதவி அவருக்கு தலைக்கனம் ஏற்படாது. அனைவரிடமும் நட்புடன் அரவணைத்து போனது. குமரி திமுகவில் அவருக்கு கிடைத்த முதல் வெற்றியோடு. மாவட்ட அரசியலில் பரவலாக நல்ல பெயரையும் சம்பாதித்துக்கொண்டார்.

திமுக அரசியலில், குமரி மாவட்டம் மட்டுமே அல்லாது, தமிழகம் முழுவதும் ஸ்டாலினின் தனித்த அன்பை பெற்றவர் என்பது சக அமைச்சர்கள் மட்டுமே அல்லாது, அரசு அதிகாரிகள் மட்டத்திலும் ஒரு வி.வி.ஐ.பி.,யாக மதிக்கப்பட்டார். அமைச்சரை தொடர்ந்து மாவட்டம் செயலாளர் பதவி சமகாலத்தில் பெற்றது. இவரது அரசியல் மின்தூக்கி பயண வேகத்தில் சுரேஷ் ராஜான் பயணித்தார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி போல் நாகர்கோவில் தொகுதியும் இவருக்கு ஒரு பாதுகாப்பான தொகுதியாக அமைந்தது.

நாகர்கோவில் தொகுதியில் 2016_ல் முதல், முதலாக போட்டி இட்டு வெற்றி பெற்றாலும். அதிமுக ஆட்சி தொடர்ந்த நிலையில் எதிர் கட்சி வரிசையில் ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்கள், மாவட்ட செயலாளர் என்ற நிலையில் கட்சியினரும் இவருடன் உடன் இருந்து கட்சி பணியில் ஆதரவாக இருந்தனர்.

சுரேஷ் ராஜான் சூழல் காரணமாக கட்சியினரிடம் சில சமயங்களில் கடுமையாக இருந்தாலும், அடுத்த சில நொடிகளில் அத்தனை சினம் கொண்டது இவர் தானா.!? என ஆச்சரியப்படும் வகையில் அன்பை வெளிப்படுத்துவது, இவரது தனித்த இயல்பு.

கலைஞர் மறைவுக்கு பின் வந்த முதல் தேர்தலில். நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார்.

குமரி அரசியலில் 2021_தேர்தல் முடிவு அதிசயம் தரும் நிலையில். திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளை தொடர்ந்து காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது.

பத்மநாபபுரத்தை திமுக நான்காவது முறையாக தக்க வைத்துக்கொண்டாலும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. கன்னியாகுமரியில் ஆஸ்ட்டினை அகற்றி விட்டு அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் வெற்றி கனியை பரித்துவிட்டார்.

நாகர்கோவிலில் தொகுதி வெற்றியை பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி நம்பிக்கை இல்லாமல் களத்தில் இறங்கினாலும். பாஜகவின் இந்துத்துவ வேகத்தை அதிகம் வெளிக் காட்டாது. கிறிஸ்தவ நாடார் வாக்காளர்களை அணுகிய எம்.ஆர். காந்தி அவரது முதுமையை சொல்லி, இதுதான் என் கடைசி தேர்தல் என ஒவ்வொரு கிறிஸ்தவ நாடார்களை முதல் முறையாக தாமரைக்கு வாக்களிக்க வைத்தது. சுரேஷ் ராஜனின் வெற்றியை தடுத்து விட்டது.(சுரேஷ் ராஜன். எம்.ஆர்.காந்தியின் இந்த முயற்சியை தடுக்க முயலாதது இவரது தோல்விக்கு காரணம்)

பாஜகவிடம் தோல்வி என்பதை கனவில் கூட காணத சுரேஷ் ராஜான் அதிர்ச்சியின் எல்லைக்கே போய் விட்டார். வாக்குகள் எண்ணி முடிந்ததும் வெற்றி. முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அமைச்சர் என்ற அவரது நினைவுகள் கலைந்த கோலமானது……

குமரி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர்,ஆளும் கட்சி என்ற உரிமை நிலையில் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த மனிதனாக உலா வந்த போது வந்த உள்ளாட்சி தேர்தலில்.

நாகர்கோவில் நகராட்சி. அதிமுக காலத்தில் மாநகராட்சியாக மாற்றப்பட்டப்பின் நடந்த முதல் தேர்தலில் முதல் மேயர் யார்.? திமுக, பாஜக இடையே ஆன அரசியலில் போட்டியில். திமுகவின் அதிகார பூர்வ வேட்பாளர் மகேஷ், சுரேஷ் ராஜான் இடையே ஏற்பட்ட அரசியல் புயல்.சுரேஷ்ராஜனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி. !!

சுரேஷ் ராஜன் அரசியலில் ஏற்பட்ட விபத்தை சற்று மெளனமாகவே கடத்தினார். அரசியலில் மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் என காத்திருந்த நிலையில். அரசியலில் சில காய் நகர்த்தல்கள் ஏற்படுத்திய சூழலையும் ஏற்றுக்கொண்டு காத்திருந்தவருக்கு இப்போது காலம் கனிந்து வத்துக்கொண்டு கொண்டிருக்கும் நிலையில், சுரேஷ் ராஜனின் பிறந்த நாள் எதிர் வரும் (மார்ச்_31) வரவிருக்கும் நிலையில், புதிய திருப்பமாக குமரி மாவட்டம் முழுவதும் இவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள வாழ்த்து சுவரொட்டிகள். கட்சியினரை மட்டும் அல்லாது,பொது மக்களையும், அனைத்து கட்சியினர் கண்களை அகல விரிய வைத்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது அன்பை வெகுகாலமாக பெற்றுள்ள சுரேஷ்ராஜனுக்கு பிறந்த நாள் கேக் (பதவியாக) தமிழ்நாடு உணவு பொருள் பாதுகாப்பு வழங்கல் துறையின் தலைவராக அரசின் அறிவிப்பு வரவிருக்கிறதாம்.