• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உச்சநீதிமன்ற தீர்ப்பு- ராஜபாளையத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Feb 23, 2023

ராஜ பாளையத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து நகரச் செயலாளர்கள் முருகேசன் பரமசிவம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.


தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர்இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து நகரச் செயலாளர்கள் முருகேசன் பரமசிவம் ஆகியோர் தலைமையில் 80க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.இந்நிகழ்ச்சியில் யோகசேகரன் வனராஜ் அழகாபுரியான் ராமகுமரேசன் ஸ்ரீராம் ராஜா செல்லபாண்டி நகர மகளீரணி செயலாளர் ராணி ஒன்றிய மகளிரணி செயலாளர் லீலா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக்கழக மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்..