• Fri. Apr 18th, 2025

மஞ்சூர் குந்தா ஒன்றியத்தில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்கியுள்ளது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதால் மஞ்சூர் பஜார் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜ்ன் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பேரூராட்சி அவைத் தலைவர்துரைசாமி பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ்கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி மற்றும் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும்… தொண்டர்களும்… பொதுமக்களும் கலந்துகொண்டனர்.