• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் கோடை வெயில்

கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40.0 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.