• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நிலவளத்தை பெருக்கி பாதுகாக்க கோடை உழவு அவசியம்

ByA.Tamilselvan

May 9, 2022

விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கச்சான்று உதவி இயக்குனர் த.சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் நிலவளத்தை பெருக்கி பாதுகாக்க கோடை உழவு அவசியம் எனவே மாவட்ட விவசாயிகள் கோடை உழவை துவங்க வேண்டும் என கோரி்க்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒராண்டு மழை அளவான 820மில்லி மீட்டரில் 8 ல் ஒரு பங்கு கோடைகாலத்தில் பெய்கிறது. இந்த மழையை வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.சாகுபடிக்கு பிறகு தரிசாக உள்ள நிலம் கடினமானதாக இருக்கும். எனவே இந்த கோடைமழையை பயன்படுத்தி நன்கு உழுவு செய்தால் மண்ணின் கடினத்தன்மை மாறி பொலபொலவென ஆகிவிடும்.மண்ணில் காற்றோட்டமும், நுண்ணியிர்கள் பெருக்கமும் அதிகரிக்கும்.
நோய் மற்றும் பூச்சிகளைபரப்பும் காரணிகளான களைசெடிகள் அழிக்கப்பட்டு மண்ணில் மக்கி ஊரம் ஆகிவிடுவதால் களைகளின் தாக்குதல் கணிசமாக குறைந்துவிடும்.இது தவிர மண்ணுக்குள் இருக்கம்பூச்சிகள்,கூட்டுப்பூழுக்கள் மண்ணின் மேல்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பறவைகளுக்கு இறையாகிவிடும்.நீர் ஊடுவி செல்வதற்கான தன்மை அதிகரிக்கிறது.டிராக்டர் மூலம் உழும்போது 5 கொத்துகலப்பை மூலம் உழுவது நல்லபயன்தரும்.இதனால் நிலம் அடுத்த சாகுபடிக்கு எளிதாக விடுகிறது.நெல் அறுவடைக்குபின் தேங்கியுள்ள தாள்களில் பூச்சிகள் இனபெருக்கம் செய்யும்.
எனவே விவசாயிகள் அனைவரும் கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நிலவளத்தைபெருக்கி பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மிகவும்பயனுள்ளதாக அமையும் எனறு விருதுநகர் மாவட்ட விதைசான்று மற்றும் அங்கச்சான்று உதவி இயக்குனர் த.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.