• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசு விடுதிகளில் உணவு கட்டணம் திடீர் உயர்வு..!

Byவிஷா

Jan 24, 2024

பள்ளி மாணவ, மாணவிகள் தங்கும் அரசு விடுதிகளில் உணவுக் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது..,
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ, மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.