• Wed. Mar 26th, 2025

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை : எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி..!

Byவிஷா

Jan 23, 2024

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்.ஐ.ஆர் தகவல்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த எப்.ஐ.ஆர்-ல், அந்த பெண்ணை வீட்டில் உள்ள குப்பைகளை வாயால் எடுக்க சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும், மேலும் அவரது பிறப்புறுப்பில் உதைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதோடு நிற்காமல் வீட்டு வேலைக்கு வந்த மற்றவர்களை வைத்து அடிக்க விட்டதாகவும், அவரின் கையில் ஏற்பட்ட காயத்தை மெகந்தி வைத்து மறைக்க கூறியதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.