• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் தீ..

Byகாயத்ரி

Dec 1, 2021

தலைநகர் டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 59-ல் இன்று காலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர், அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட போது, பணியாளர்கள் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அந்த அறையில் இருந்த சில கோப்புகள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.