• Fri. Mar 29th, 2024

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீர் மாற்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி என்னும் பகுதியில் கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொடநாடு வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கை மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார்.

இந்நிலையில்,கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நிர்வாக காரணங்களுக்காக 55 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் உதகை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபாவும் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை முதல் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக சென்னையில் உள்ள தொழித்துறை தீர்ப்பாய நீதிபதி முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *