கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை பக்தர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் திரளா பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.





