

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 23_ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மிகுந்த வெப்பம் நிலவிய நிலையில் தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்து பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
திருவிழாவின் 9_வது நாள் ஆன (ஆகஸ்ட்_31) மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.
இந்திரன் தேராகிய சப்பரத்தேரில். பெருமாள்,தேவி, பூதேவி எழுந்தருளினர்.
அலங்கரிக்கப்பட்ட தேர் சுசீந்திரம் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.
சுசீந்திரம் ஆவணித் தேரோட்டத்தின் தனி சிறப்பு இந்த தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே திருத்தேர் வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். ஆண்கள் சக்கரத்தின் சுழற்சி மற்றும் திருப்பங்களில் தேர்வுக்கான அடை போடும் பணிகளை கண்காணிப்பது மட்டுமே.
