• Sat. Apr 27th, 2024

சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910)…

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர்.சி.வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே மேலும் இரு கட்டுரைகளும் பதிப்பாயின. 1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.

பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

சந்திரசேகர்க்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான் இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு ‘அணுகுண்டு’ போல வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார். பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார். நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகஸ்ட் 21, 1995ல் தனது 84வது அகவையில், அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *