• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முட்டாள்தனமான செய்தி – விஜய் தேவரகொண்டா!

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.. அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்துவரும் இவர் தற்போது ‘லைகர்’ படத்தை நடித்து முடித்துள்ளார்..

இந்நிலையில், அவரும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன… இருவரும் ஜோடியாக பொதுவெளியில் சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் மவுனம் சாதித்து வந்த நிலையில், தற்போது வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

ராஷ்மிகா மந்தவுடனான காதல் குறித்த செய்திக்கு, இது வழக்கம்போல் பரப்பப்படும் முட்டாள் தனமான செய்தி எனக் கூறியுள்ளார். அவர் ஒருவரியில் கொடுத்த பதிலையும் ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள், ராஷ்மிகாவை காதலிக்கவில்லை என அவர் கூறவில்லை. இதனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பதில் மாற்றமில்லை என புதிய யூகங்களை கிளப்பிவிட்டுள்ளனர்.