• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வெள்ளை உடையில் கீர்த்திசுரேஷின் அசத்தலான புகைப்படங்கள்..!

Byadmin

Jun 29, 2022

வெள்ளை உடையில் நடிகை கீர்த்திசுரேஷின் அசத்லான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தில் ‘உன்மேல ஒரு கண்ணு’ என்ற பாடல் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன்பிறகு ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், வாஷி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.


தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 13 மில்லியன் ரசிகர்களை வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் புதிய போட்டோஷ_ட்டுகளை அடிக்கடி எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை உடையில் கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோ{ட் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.