• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நடிகை மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

Byகாயத்ரி

Jun 29, 2022

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில நாட்களாக நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்தாலும் நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்பதால் அறுவை சிகிச்சை தாமதமானது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் சிகிச்சையின் பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு காலமானார். இதனை அடுத்து அவருடைய உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.