• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

Byகாயத்ரி

Nov 12, 2021

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வினால் பல உயிர்களையும் இழந்துள்ளோம். ஏனென்றால் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது.


நீட் தேர்வினால் பல மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக காந்திய வழியில் போராட்டம் நடத்தப்பட்டது.


இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு சாலையில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.