அரியலூர் மாவட்டம்,செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் நேற்று நடந்த இறை வணக்கம் கூட்டத்தின் போது போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற இலக்குடன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி 568 மாணவ மாணவியர்கள் ,20 ஆசிரிய , ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்துபோதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




