• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவர்கள் இணைந்து இஸ்லாமிய கண்காட்சி..,

ByM.JEEVANANTHAM

Aug 3, 2025

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை பெண்கள் அரபிக் கல்லூரி மற்றும் மக்தப் மதரசா மாணவ மாணவிகளின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. முத்தவல்லி சஹாபுதின் தலைமையில் தலைவர் ஹாஜா நஜ்புதீன் மற்றும் நாட்டாமை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் மதரஸாவில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கண் கவர் கண்காட்சி நடைபெற்றது.

இவ்ஊரை சுற்றியுள்ள கதிராமங்கலம் திருமங்கலம் நரசிங்கம்பேட்டை தேரழுந்தூர் தீ பண்டாரவாடை உள்ளிட்ட ஊர்களில் இருந்து அனைவரும் வந்து கண் கவர் இஸ்லாமிய கண்காட்சி கண்டு ரசித்தனர் தொடர்ந்து கண்காட்சிக்கு நடுவராக பஹ்ருத்தீன் முஹம்மது ரியாஸ் கமருத்தீன் சிக்கந்தர் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட கண்காட்சிக்கு மதிப்பெண் வழங்கி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இறுதியில் பள்ளி இமாம் ஷேக் முஹம்மது நன்றியுரை வழங்கினார்.