• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள்

நவம்பர் 2 ஆம் தேதியான இன்று குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியான இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள குமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி, மலர் கொடுத்து இன்முகத்தோடு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களை வரவேற்றனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவியருக்கும், பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.