• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

ByA.Tamilselvan

Oct 11, 2022

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.