• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கியது – அமைச்சர் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் என்றும் பல முறை சிறை சென்ற அவர் சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் மதுரை எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. மதுரையின் எய்ம்ஸ்ஸில் இடம் கிடைக்கும் 50 மாணவர்களும் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து காக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பரிசோதனைகள் குறைக்கப்படும் என்றார்.