• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி..,

ByT. Vinoth Narayanan

Apr 17, 2025

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்து விதமாக விழிப்புணர்வு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கோட்டையூர் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இயங்கி வரும் பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். வழக்கமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளை அவர்கள் பெற்றோர்கள் ஆறாம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் கோட்டையூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு சேர்கை துவங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளியின் சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ – மாணவிகள் அரசு பள்ளியில் படித்தால் கிடைக்கும் பயன்கள் குறித்த கருத்துகளை பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கலந்து கொண்டு துண்டறிக்கையை வழங்கினார்.