• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்- பஸ் கிளீனர் கைது

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி பிளஸ்-2 மாணவி வந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் மாணவிக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மேல்பட்டியை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனர் கவுதம் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.ஆசைவார்த்தைகளை கூறி கவுதம் பெங்களூருக்கு மாணவியை கடத்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கவுதம் மற்றும் மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கவுதம் கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். பின்னர் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்..