• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கொரோனா பரவும் நேரத்தில் இப்படியொரு கோரிக்கையா?.. நீங்களே பாருங்க!

By

Sep 6, 2021 ,

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து வகையான பள்ளிகளையும் திறக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டமானது தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல்,பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட தலைவராக செந்தூர்பாண்டியன், செயலாளராக சாலமோன், பொருளாளராக கற்பகம், துணைத்தலைவராக சராபின்,துணைச்செயலாளராக முருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு ஜெனட்பொற்செல்வி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பரிந்துரை செய்து தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், தமிழக முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் மாணவர்களின் நலன் கருதி அனைத்துவகை பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.