• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

வேலை நிறுத்த போராட்டம்..,

ByB. Sakthivel

Apr 9, 2025

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முதல் தொடர் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் அனைத்து அரசு சாலைப்போக்குவரத்து கழக பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.அரசு தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை தொடர் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

சென்னை மாகி காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன உள்ளூர் பேருந்துகளை நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கம் நடவடிக்கை தற்பொழுது வரை ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தினால் அரசு பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.