• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ByKalamegam Viswanathan

Feb 27, 2023

மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர், திடீர் ஆய்வு மெற்கொண்டார்.ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, ஒன்றியத்தின் பண்னை மற்றும் பால் பை நிரப்பும் பகுதிகளையும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமாகவும் சுகாதார முறையிலும் பணிபுரிவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின், மதுரை மற்றும தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பொது மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள்,துறைதலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர்களுடன் திறனாய்வு கூட்டம்நடத்தப்பட்டது.பால் கொள்முதலை உயர்த்தி, பால் விநியோகம் தடையின்றி நடைபெற களப்பணியாளர்களை சிறப்புடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட அறிவுறுத்தினார். மேலும் ,தரமற்ற பாலை கையாலும் தனியார் மீது உணவு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவரை கேட்டுக்கொண்டார். ஆணையர் அறிவுத்தும் போது ,தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறைபதிவாளர் (பால்வளம்) மற்றும் பொதுமேலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மொத்த பால் குளிர்விக்கும் நிலையங்கள் மூலம் தரமான பால் கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என, பொதுமேலாளர் மற்றும் களப்பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
ஒன்றியத்தின் பால் பை நிரப்பும் பிரிவுகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த விதிகளின்படி சரியான எண்ணிக்கையில் தொழிலாளர்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமேலாளருக்கு அறிவுறுத்தினார். மேலும், பால் விநியோக வழித்தட ஒப்பந்ததாரர்கள் பால் குறித்த நேரத்தில் நுகர்வோருக்கு சென்றடைய ஆவினுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆவின் பொதுமேலாளர்கள், துறைப்பதிவாளர்கள், துறைதலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.