• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்..,

தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாக
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம் வஉசி திடலில் கம்பம் தெற்கு நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஹரீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கம்பம் தெற்கு நகர திமுக இளைஞரணி அமைப்பாளர்
எஸ்.ஹரீஸ்குமார் தலைமை தாங்கினார். கம்பம் தெற்கு நகர திமு.க பொறுப்பாளர்
சி.பால்பாண்டிராஜா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்செஞ்சரி செல்வம், துணை அமைப்பாளர் கே.எஸ்.கே.இராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி முத்து பிரபு, நகராவைத் தலைவர் ராஜன், தெற்கு நகர துணை செயலாளர் செல்வம், வடக்கு நகர் அவை தலைவர் அப்துல் ரஹீம், உனக்கு நகர பொருளாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் இரா.பாண்டியன், கழக இளம் பேச்சாளர்கள் நாகூர் கனி, கனிஷ்டா, கம்பம் வடக்கு நகரச் செயலாளர் எம் சி வீரபாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன் சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசின் நான்காண்டு சாதனை குறித்து பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இளைஞர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் வறுமை இல்லை, பட்டினிச் சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய சாதி மோதல்கள் இல்லை, மதக் கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை என
பேசினார்கள்.

கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கம்பம் தெற்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் நன்றி கூறினார்.