• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நடைபணத்தை நிறுத்துங்கள் ..ராகுலுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக

ByA.Tamilselvan

Dec 21, 2022

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் கடிதம் எழுதி உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், முகமூடி, சானிடைசர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் மேலும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், கோவிட் நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய நலன் கருதி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது என்றார். இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். எங்கள் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது, மேலும் தொடரும் என்று கூறிய அவர், ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார் என்றார். நாட்டில் பாரத் ஜோடோ யாத்ராவின் தாக்கம் உள்ளதால் பாஜக மிகவும் கலக்கத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஜேபி நட்டாவின் ஆக்ரோஷ் பேரணி கடுமையான தோல்வியடைந்தது “திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை என்று அசோக் குற்றம்சாட்டியுள்ளார்.