• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வைகை நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்-எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்..,

ByK Kaliraj

Apr 12, 2026

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நரிக்குடி மேற்கு ஒன்றியத்தில் நாற்பதுக்கும் மேற் பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பேசிய அப்போது அவர் பேசிய தாவது:- தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. திருச்சுழி தொகுதியில் உள்ள காரியா பட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய மூன்று ஒன்றியங்களும்

மிகவும் வறட்சியான பகுதி யாகவும், இந்த பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக விவசாயத்தை நம்பியும் வாழ்ந்து வருகின்றனர்.

கிருதுமால் நதி இந்த பகுதியில் மக்கள் வாழ்வாதாரம் ஏற்றம் பெறவும் தொழிற் சாலைகளை உருவாக்கி தொகுதியை முன்னேற்ற வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன். இந்த பகுதியில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகிறது. இதை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.

நரிக்குடி பகுதியில் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசாணை பெற்று தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். உற்சாக வரவேற்பு நரிக்குடி ஒன்றியத்தில் வாக்கு கேட்டு சென்ற அவ ருக்கு பொதுமக்கள், அ.தி. மு.க. கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பிரசாரத்தின் போது முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமேகலை, மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், சுப் பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்