கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 17 மற்றும் 18-ம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்து, ஜனநாயகம்,அரசியலமைப்பு ஆட்சி மற்றும் குடிமக்கள் உரிமைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ள பிரச்சினைகள் பற்றி ஆழமாக விவாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷஃபிக் அஹமது:-

பல மாநிலங்களில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கும் முயற்சியாக உள்ள சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) யை எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையம் சுதந்திர அரசியலமைப்பு அமைப்பாக செயல்படாமல் மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து பெருமளவிலான வாக்குரிமைப் பறிப்புக்கு உதவி செய்து தேர்தல் முடிவுகளை கையாண்டு ஆட்சியைப் பிடிக்க அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என்று எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியது.
அதே போல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை (MGNREGA) விக்சித் பாரத்-கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் கிராமின் என மாற்றியமைத்ததை எஸ்டிபிஐ தேசிய செயற்குழு கண்டிக்கிறது.இது பாஜகவின் சித்தாந்த சகிப்பின்மை மற்றும் மகாத்மா காந்தியின் பங்களிப்பை மறுக்கும் போக்கை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டு.
இந்திய சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் பிரச்சினை குறித்து எஸ்டிபிஐ தேசிய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கருத்து உடையோர்,செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சியினர் கொடூரச் சட்டங்களின் கீழ் இலக்கு வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இது இந்திய ஜனநாயகம் அதிகாரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளதை காட்டுவதாக உள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைஸி போலியான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கலின் தெளிவானதாவும் இந்த கொடூரமான அநீதியான ஆட்சிக்கு எதிராக மக்கள் அச்சமின்றி ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று எஸ்டிபிஐ செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
எதிர் வரும் கேரளா,தமிழ்நாடு,மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் என்றும் அதற்கான தேர்தல் தயாரிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்புதீன் அஹமது,பொதுச் செயலாளர்கள் முகமது இல்யாஸ் தும்பே, அப்துல் மஜீத் பைஸி,யாஸ்மின் ஃபரூக்கி, சீதாராம் கோய்வால்,முகமது அஷ்ரப், தேசிய செயலாளர்கள் அல்போன்ஸ் ஃப்ரான்கோ,ரியாஸ் பாரங்கிபேட்,தைஜூல் இஸ்லாம், அப்துல் சத்தார்,பைஸல் இஸ்ஸூதீன், ரூனா லைலா,தேசிய பொருளாளர் அப்துல் ரவூஃப்,தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்,மாநில பொருளாளர் கோவை முஸ்தபா, கோவை மத்திய மாவட்ட தலைவர் இஷாக்,மாவட்ட துணைத் தலைவர் ரஹீம்,மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது,அமைப்பு பொது செயலாளர் இப்றாஹிம் பாதுஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.




