• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இடம் இருக்கு, பட்டா கொடுங்க! – பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மக்கள் மனு!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்டது கம்பாலபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி குகக்கிராம மக்கள் இலவச பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட கம்பாலபட்டி ஊராட்சியில் 9 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் நிபந்தனையை மீறி மாற்று இனத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்காணும் கண்டிசன் பட்டாவை ரத்து செய்து, ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச
வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோயில் அருகே வசிக்கும் சுமார் 20 குடும்பத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும். மேலும் அப்பகுதியில் மின்சார வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக மின்சார வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, கம்பாலபட்டி ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.